தூத்துக்குடி சம்பவம் குமரி, தக்கலை, கருங்கல்லில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து கன்னியாகுமரி, தக்கலை, கருங்கல்லில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து கன்னியாகுமரி, தக்கலை, கருங்கல்லில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கன்னியாகுமரி தொகுதிச் செயலர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலர் ஜெயசீலன், செய்தித் தொடர்பாளர் ஹரிஹரன், மண்டலஒருங்கிணைப்பாளர் நாகராஜன் உள்பட ஏராளமானோர் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
சிஐடியூ: கன்னியாகுமரி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு சிஐடியூ சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு குலாம்மைதீன் தலைமை வகித்தார். சிஐடியூ மாநில துணைச் செயலர் சர்கான் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினார். இதில் ரபீக், ராமகிருஷ்ணன், சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தக்கலை: தூதக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மேற்குமாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மனோதங்கராஜ் தலைமை வகித்தார். நகரச் செயலர் மணி முன்னிலை வகித்தார். இதில் முன்னாள்அமைச்சர் கு. லாரன்ஸ், மாவட்ட துணைத் தலைவர் ஜாண் கிறிஸ்டோபர் ,ஒன்றியச் செயலர்கள் அருளானந்த ஜார்ஜ், சித்தார் ரவீந்திரன், மனோன்மணி, பி. ராஜன், ஆர்.எஸ்.ராஜேந்திந்திரன், குழித்துறை நகரச் செயலர் பொன்.ஆசைதம்பி, வழக்குரைஞர் முத்துகுமரேஷ், ஆல்பர்ட், சிராஜூதின், குமார், உண்ணிகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தக்கலை பழைய பேருந்து நிலையம் முன்பு வழக்குரைஞர்கள் நெல்சன் தலைமையில் 20 பேர் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது காவல் உதவி ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மறியல் போராட்டம் நடத்த அனுமதியில்லை எனவே கலைந்து செல்லுமாறு கோரினார். போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக எழுந்து கோஷம் போட்டவாறே வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். இதனை காவல் துறையினர் தடுத்த போதும், தேசியநெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். போலீஸார் வழக்குரைஞர்களை கைது செய்ய வாகனத்தை கொண்டுவந்தபோது அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கருங்கல்: கருங்கல்லில் கிள்ளியூர் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரக்குழு உறுப்பினர் ராஜா தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் சாந்தகுமார் முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் வில்சன், வட்டாரக்குழு உறுப்பினர் சத்தியநேசன் ஆகியோர் பேசினர். இதில், அல்போன்ஸ் , ஜவஹர் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com