களியக்காவிளையில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

மேல்புறம் வட்டார சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் களியக்காவிளையில் காய்ச்சல்

மேல்புறம் வட்டார சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் களியக்காவிளையில் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வருகிறது. நாகர்கோவில் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தார். இந்த நிலையில் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக களியக்காவிளை பேருந்து நிலையம்,  சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் மேல்புறம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ஸ்ரீ குமார், ஜோபின் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் இணைந்து பயணிகள், பொதுமக்களிடம் காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com