"கிருஷ்ணமங்கலத்தில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அரசு அலுவலகங்கள்'

வில்லுக்குறி அருகே பாசனக் குளத்தை ஆக்கிரமித்து அரசு அலுவலகங்கள் கட்டடப்பட்டுள்ளது குறித்து 

வில்லுக்குறி அருகே பாசனக் குளத்தை ஆக்கிரமித்து அரசு அலுவலகங்கள் கட்டடப்பட்டுள்ளது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர். 
      கல்குளம் வட்டம்  சடயமங்கலம் வருவாய் கிராமம்   கிருணமங்கலம் பகுதியில் உள்ளது மண்குளம். இக்குளம் இரண்டேகால் ஏக்கர் பரப்பளவு உள்ளது. இதன் மூலம்  சுமார் 50 ஏக்கர் விவசாய நிலம் பயன் அடைந்து வந்தது. இக்குளம் படிப்படியாக மண்ணால் மூடப்பட்டு வந்துள்ளது.  இதனால் இப்பகுதி விவசாயிகள் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுவருவதாகவும், சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் எனவே இக்குளத்தை மீட்டு தரவேண்டுமெனவும் பல ஆண்டுகளாக  கோரி வந்தனர்.
  இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர்  இக்குளத்தை  அளவீடு  செய்ய  உத்தரவு பிறப்பித்தனர். அதன் அடிப்படையில்   கடந்த நில நாள்களாக இக்குளம்  அளவீடு செய்யப்பட்டு  வந்தது.   கோதையாறு பாசனத்திட்ட குழுத் தலைவர்  வின்ஸ் ஆன்ரோ, தலைமையில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கதிரவன் முன்னிலையில்  கல்குளம் வட்ட நில அளவையாளர், கிராம அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்கள், பாசன திட்டகுழு உறுப்பினர் முருகேசபிள்ளை ஆகியோர்  இப்பணியை மேற்கொண்டனர். 
  நிலத்தை அளவீடு செய்ததில், குளத்தை மண்ணால் நிரப்பி  சடயமங்கலம் ஊராட்சி அலுவலகம்,   கால்நடை மருந்தகம், நூலகம் , சமுதாய நலக்கூடம்  உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  மேலும் சுமார் 150 தென்னை மரங்கள்,   தனியாரால் சுற்றுச் சுவர்  கட்டப்பட்டிருப்பதும்  கண்டுபிடிக்கப்பட்டது. 
  தற்போது இக்குளம் 10 சென்ட்டில் மட்டுமே நீர் நிரம்பி சிறிய  குட்டை போல் காட்சி அளிக்கிறது.  விவசாயத்திற்கும், பொதுமக்களுக்கும்  பயன்பட்டு வந்த குளம்  மூடப்பட்டுஅரசு  கட்டடங்கள்  கட்டியிருப்பதை  பொதுப்பணி செயற்பொறியாளர் வேதஅருள்சேகர்   மற்றும் உயர் அலுவலர்கள்  சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு,   குளத்தை மூடி கட்டப்பட்டுள்ள கட்டடங்களில்  பொதுப்பணித்துறைக்கானது என அடையாளமிட்டுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com