களியக்காவிளை அருகே இ-சேவை மையத்துக்குப் பூட்டு: பெண் பணியாளர் போராட்டம்

களியக்காவிளை அருகே வேளாண் கூட்டுறவு சங்கத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தை சங்கத் தலைவர்

களியக்காவிளை அருகே வேளாண் கூட்டுறவு சங்கத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தை சங்கத் தலைவர் செவ்வாய்க்கிழமை பூட்டிச் சென்றதை கண்டித்து, பெண் பணியாளர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
களியக்காவிளை அருகேயுள்ள குழிவிளை பகுதியில் அதங்கோடு சாரப்பழஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள இ-சேவை மையத்தில் அதங்கோடு பகுதியைச் சேர்ந்த திவ்யா கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர் செவ்வாய்க்கிழமை காலை பணிக்கு வந்தபோது இ-சேவை மைய அறை பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, இ-சேவை மையம் முன் மாலை வரை அவர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, இ-சேவை மையம் பூட்டப்பட்டதால், பல்வேறு சான்றுகளுக்காக விண்ணப்பித்தோர் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க வந்தோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com