நாகர்கோவிலில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகர்கோவிலில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலர் கே.தங்கமோகன் தலைமை வகித்தார்.  
சிஐடியூ மாவட்டத் தலைவர் பி.சிங்காரன்,  மாநிலச் செயலர் ஐடா ஹெலன், தொமுச மாநில துணைச் செயலர் இளங்கோ, மாவட்ட கவுன்சில் செயலர் ஞானதாஸ், ஏஐடியூசி மாவட்டத் தலைவர் இசக்கிமுத்து, ஐஎன்டியூசி மாவட்டத் தலைவர் அனந்தகிருஷ்ணன், எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் முத்துக்கருப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
பெரு நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்கும் தொழிலாளர்கள் மீதான நிர்வாகங்களின் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்; 
மின் வாரிய ஊழல்களை களைய வேண்டும்; குறிப்பிட்ட கால வேலைவாய்ப்பு முறையை முழுமையாக கைவிட வேண்டும்; ஒப்பந்த முறை அவுட் சோர்சிங் முறைகளை அமல்படுத்தக்கூடாது  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களை செயலிழக்க செய்யும் தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
இதில், தொமுச போக்குவரத்து சங்கச் செயலர் சிவன்பிள்ளை, மாவட்டத் தலைவர் மாடசாமி, நிர்வாகி கனகராஜ், சிஐடியூ நிர்வாகிகள் பொன்.சோபன ராஜ், ஜான் செளந்தர்ராஜ், சந்திர கலா, நடராஜன், ஏஐடியூசி மாவட்டச் செயலர் அனில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com