ஆவணித் திருவிழா: சுசீந்திரம் கோயிலில் கொடியேற்றம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தாணுமாலய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி,  மார்கழி, மாசி மாதங்களில் திருவிழா நடைபெறும். சித்திரை மாதம் தெப்பத் திருவிழாவும், மார்கழி மாதம் மார்கழிப் பெருந்திருவிழாவும், மாசி மாதம் திருக்கல்யாண திருவிழாவும் நடைபெறும்.
ஆவணி மாதத் திருவிழா, மூலவராகிய தாணுமாலயனை அடுத்துள்ள திருவேங்கட விண்ணவப்பெருமாளுக்கு நடைபெறும். நிகழாண்டு திருவிழா  வெள்ளிக்கிழமை (செப்.14) தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு திருவேங்கட விண்ணவப்பெருமாள் சன்னதியில் இருந்து மேளதாளத்துடன் கொடிப்பட்டம் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடியை மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ ஏற்றிவைத்தார். தொடர்ந்து கொடி பீடத்துக்கு சிறப்புப் பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடத்தப்பட்டது.
இத்திருவிழா தொடர்ந்து செப். 23 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. 9 ஆம் திருவிழாவான செப்.22 ஆம் தேதி மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் திருக்கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com