தமிழகத்தில் குமரி உள்ளிட்ட 29 மாவட்டங்களில் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லை: பொன். ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி உள்ளிட்ட 29 மாவட்டங்களில் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லை என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி உள்ளிட்ட 29 மாவட்டங்களில் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லை என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தூய்மை சேவை விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது:
பிரதமர் மோடி மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதற்காகவே அவர் தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 76 ஆயிரத்து 188 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் அனைத்திலும் கழிப்பறைகள் உள்ளன. இதன் மூலம் குமரி மாவட்டத்துக்கு 100 சதவீத சுகாதாரம் கொண்ட மாவட்டம் என்ற சிறப்பு கிடைத்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் மேலும் 28 மாவட்டங்கள் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத மாவட்டங்களாக திகழ்கின்றன. இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை. குமரி மாவட்டம், கல்வி மற்றும் சுகாதாரத்தில் சிறந்த மாவட்டம் என்ற சிறப்பை பெற வேண்டும். மற்ற மாவட்டங்களுக்கு நாம் முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தூய்மையே சேவை உறுதிமொழியினை அமைச்சர், ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், அ. விஜயகுமார் எம்.பி., குமரி மாவட்ட பாஜக தலைவர் முத்துகிருஷ்ணன், நகரத் தலைவர் நாகராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் கனகராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com