புதுக்கடை அருகே கால்நடை தீவன தயாரிப்பு பயிற்சி முகாம்

புதுக்கடை அருகே உள்ள முன்சிறையில் கிரீன்கிளப் சார்பில் மகளிர் குழு விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கான தீவனம் தயாரிப்பு குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.


புதுக்கடை அருகே உள்ள முன்சிறையில் கிரீன்கிளப் சார்பில் மகளிர் குழு விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கான தீவனம் தயாரிப்பு குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
கிரீன் கிளப் நிர்வாக அலுவலர் ஜஸ்டஸ் பிரேம்சன் தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சதீஸ் முன்னிலை வகித்தார். கிரீன்கிளப் அமைப்பாளர் லூயிசன் பயிற்சியைத் தொடங்கிவைத்துப் பேசினார்.
கிரீன் கிளப் தலைவர் அக்ரி ராஜ்குமார், விவசாய மகளிர் அமைப்புகளுக்கு விலையில்லா வீட்டு தோட்ட செடிகளை விநியோகித்து, அசோலா தீவனம் உற்பத்தி மற்றும் செய்முறை குறித்து பயிற்சி அளித்தார்.
கிரீன் கிளப் மகளிர் செயலர் ஜெனிலா, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். அஜிதா நன்றி கூறினார். முன்னதாக பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அசோலா விதைப் பைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com