தாமிரவருணி நதியை பாதுகாக்க வலியுறுத்தல்

தாமிரவருணி நதியை பாதுகாக்க வேண்டும்; தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய

தாமிரவருணி நதியை பாதுகாக்க வேண்டும்; தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என அகில பாரத இந்துமகா சபா, இந்து மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற அகிலபாரத இந்து மகாசபா, இந்து மக்கள் இளைஞரணியின் தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அகிலபாரத இந்துமகா சபா அமைப்பின் மாநில அமைப்பாளர் ஜெ.வி. மாரியப்பன் தலைமை வகித்தார்.
இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ். உடையார், மாநில இளைஞரணி பொதுச்செயலர் குடந்தை டி. குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர். செல்வம் வரவேற்றார்.
அமைப்பின் மாநில இளைஞரணித் தலைவர் டாக்டர் ஏ. சுபாஷ்சுவாமிநாதன், இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைகண்ணன், கோவை மாவட்ட இளைஞரணி பொதுச்செயலர் காலனிபிரபு, தஞ்சை மாவட்ட பொதுச்செயலர் கோவி. ராதாகிருஷ்ணன், அகிலபாரத இந்து மகாசபா தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் சூர்யா உள்ளிட்டோர் பேசினர்.
தீர்மானங்கள்: மே 28 இல் வீர சாவர்கர் பிறந்ததினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் நடைபெறும் இந்து எழுச்சி மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது; தென்மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக திகழும் தாமிரவருணி நதியை பாதுகாக்க வேண்டும்; நதியில் இருந்து தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்; திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்; நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அகிலபாரத இந்து மகா சபா மாநில இளைஞரணித் தலைவர் இராம. நிரஞ்சன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com