மாணவர்களுக்கான உயர்கல்வி கருத்தரங்கு

பேட்டையில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

பேட்டையில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பு அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில், 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான இக்கருத்தரங்குக்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம். கோதர்முகைதீன் தலைமை வகித்தார்.
கிழக்கு மாவட்டத் தலைவர் எல்.கே.எஸ். மீரான்முகைதீன், செயலர் பாட்டபத்து எம். முகம்மதுஅலி, பொருளாளர் கானகத்துமீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் மு. முகம்மதுசாதிக், மருதகுளம் நேஷனல் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஏ. முகம்மதுபைசல், ஏ.கே.ஒய். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எம். முகம்மதுஇஸ்மாயில்மஜீத், மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப பயிலக மேலாளர் எம். பீர்முகம்மது ஆகியோர் உயர்கல்வி பயிலுவது குறித்துப் பேசினர். இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் கே. ஷேக்முகம்மதுஹனிபா வரவேற்றார். நகர மாணவரணிச் செயலர் எம். முகம்மதுசாதிக் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com