மே 1 கிராம சபைக் கூட்டத்தில் குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்க தடை கோரி தீர்மானம் இயற்ற கோரிக்கை

குளிர்பான ஆலைகளுக்கு தாமிரவருணி நதியில் இருந்து தண்ணீர் வழங்க நிரந்தர தடை விதிக்க வலியுறுத்தி, மே 1இல் நடைபெறவுள்ள சிறப்பு கிராம

குளிர்பான ஆலைகளுக்கு தாமிரவருணி நதியில் இருந்து தண்ணீர் வழங்க நிரந்தர தடை விதிக்க வலியுறுத்தி, மே 1இல் நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் 425 ஊராட்சிகளில் மே 1ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முழுமையாக, சீராக குடிநீர் வழங்கவேண்டும் என்றும், மக்கள் நலன் கருதி பன்னாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தாமிரவருணி நதியில் இருந்து தண்ணீர் வழங்க நிரந்தர தடை விதிக்க கோரும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுகிறோம்.
தாமிரவருணி நதியில் பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் இருந்தும் மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. சங்கரன்கோவில் நகராட்சியில் வசிப்போருக்கு தினமும் 52 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில் 41 லட்சம் லிட்டர் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது.
புளியங்குடியில் 33 லட்சம் லிட்டருக்கு பதிலாக 17 லட்சம் லிட்டர் தண்ணீரும், சிவகிரி பேரூராட்சியில் 13 லட்சம் லிட்டருக்கு பதிலாக 8 லட்சம் லிட்டரும், கடையநல்லூர் நகராட்சியில் 30 லட்சம் லிட்டருக்கு 12.5 லட்சம் லிட்டர் தண்ணீரும் விநியோகம் செய்யப்படுகிறது. இதேநிலைதான் மாவட்டம் முழுவதும் நீடிக்கிறது.
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக விநியோகம் செய்யும் நீரின் அளவு மேலும் குறைவாக உள்ளது. ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் தண்ணீர் வழங்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நகராட்சிகளில் ஒரு நபருக்கு 90 லிட்டரும், பேரூராட்சிகளில் 70 லிட்டரும், ஊராட்சிகளில் 40 லிட்டரும் என குறைத்து வழங்கபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. தற்போது குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. பொதுமக்களுக்கு முழுமையாக, சீராக குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் மே 9ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலங்கள் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com