தமிழக விவசாயிகளை மத்திய அரசு புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது: திருநாவுக்கரசர் பேட்டி

புது தில்லியில் உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளை மத்திய அரசு புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

புது தில்லியில் உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளை மத்திய அரசு புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
அம்பாசமுத்திர த்துக்கு சனிக்கிழமை வருகை தந்திருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பிரதமர், தமிழக மந்திரிகளையும், பேரவை உறுப்பினர்களையும் சந்திக்க நேரம் ஒதுக்கும்போது, புது தில்லிலியில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளைச் சந்திக்க நேரம் ஒதுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும். அரசு வங்கிகளில் தனியார் கடன்கள் வாராக் கடனாக உள்ளது. அதைக் கண்டு கொள்ளாத மத்திய அரசு, வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும். சட்டப் பேரவையில் திமுக சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் நாங்கள் அது குறித்து முடிவெடுப்போம் என்றார்.
அப்போது, முன்னாள் பேரவை உறுப்பினர் வேல்துரை, மாநில சிறுபான்மைப் பிரிவு அமீர்கான், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் லட்சுமணயாதவ், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயாணன், வேல்பாண்டியன், நகரத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com