நெல்லையில் மகளிர் சுய உதவி குழுக்களின் சுகாதாரக் கொண்டாட்டம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் சுகாதார வாரக் கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் சுகாதார வாரக் கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தை வரும் அக்டோபருக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆக.9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சுகாதார வாரம் கொண்டாடப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 19 ஒன்றியங்களிலும் வட்டார அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெறும். 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை, 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை, 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை என மூன்று பிரிவுகளாக பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடைபெறும். திருநெல்வேலி, சேரன்மகாதேவி, தென்காசி கல்வி மாவட்டங்கள் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.
பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சுவர் சித்திரம் வரைதல், மீம் கிரியேசன்ஸ், ஒரு நிமிட சுகாதார விழிப்புணர்வு விடியோ தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது.
இதேபோல, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மகளிர் பங்கேற்கும் விழிப்புணர்வு கூட்டங்கள், ரங்கோலிப் போட்டி, பேச்சுப் போட்டி, குழு பாடல் போட்டி ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றன. பாளையங்கோட்டை ஒன்றியத்துக்கான போட்டிகள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. தூய்மை இந்தியா எனும் தலைப்பில் இப் போட்டிகள் நடைபெற்றன.
கோலப்போட்டியில் ஈஸ்வரி மகளிர் சுய உதவிக் குழு, பாட்டுப் போட்டியில் மல்லிகை மகளிர் சுய உதவிக் குழு, பேச்சுப் போட்டியில் தாமிரவருணி மகளிர் குழு ஆகியன முதல் பரிசை பெற்றன. இதேபோல, இரண்டாம், மூன்றாம் பரிசுக்கும் ஒவ்வொரு போட்டியிலும் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன.
வெற்றி பெற்ற குழுக்களுக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ. பழனி, கவிஞர் கணபதி சுப்பிரமணியன், தேவ பிச்சை, அருணாசிவாஜி, மகளிர் திட்ட இயக்குநர் கெட்ஸி லீமா அமலினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com