அணை திறப்பு ஒத்திவைப்பு

பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணை வியாழக்கிழமை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பலத்த மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 

பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணை வியாழக்கிழமை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பலத்த மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 
பிசான பருவ சாகுபடிக்காக வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் புதன்கிழமை மாலை முதலே மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் தாமிரவருணி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் இப்போதைக்கு தண்ணீர் திறக்க வேண்டியதில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பது ஒத்திவைக்கப்பட்டது. 
ஒரே நாளில் நிரம்பிய 4 அணைகள்! மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் வியாழக்கிழமை ஒரே நாளில் சேர்வலாறு, கடனாநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு ஆகிய 4 அணைகள் நிரம்பின. 
மாஞ்சோலை எஸ்டேட் மக்கள் தவிப்பு: தொடர் மழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை சுற்று வட்டார பகுதிகளில் சாலையில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 6 எஸ்டேட்களில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com