அறிவியல் கண்காட்சியால்  மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படும்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி

அறிவியல் கண்காட்சியால் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

அறிவியல் கண்காட்சியால் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறை மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியதாவது: 
மாவட்ட அளவில் மாணவ, மாணவியருக்கான அறிவியல் கண்காட்சி நடத்துவது அவசியமான ஒன்றாகும். இதன்மூலம் மாணவர்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். நமது கல்வி அமைப்பில் பாடத்திட்டங்கள் கட்டுரை வடிவில் உள்ளது. 
இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகளை செயல்விளக்க முறையில் நடத்துவதால் மாணவ, மாணவியரின் அறிவுத்திறன் மேம்படும். அறிவியல் கண்காட்சியில் உயிரி எரிவாயு (பயோகேஸ்) , சத்தான உணவுகள், கழிவுப் பொருள் மறுசுழற்சி திட்டம் போன்றவை குறித்து எளிமையான மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. 
இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள சிறந்த செயல் விளக்கங்களுக்கு முதல் பரிசாக ரூ.1, 500,  2-ஆவது மற்றும் 3-ஆவது பரிசாக முறையே ரூ.1,000 மற்றும் ரூ.500 வழங்கப்படுகிறது. இதுபோன்ற அறிவியல் கண்காட்சியில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் பங்கேற்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் கோ.தனமணி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபாண்டி, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசிங் ஐசக் மோசஸ், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் கஜேந்திரபாபு, பள்ளி முதல்வர் ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com