மார்கழி மாத ஞாயிறுகளில் நெல்லையிலிருந்து நவகைலாய கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்

மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவகைலாய கோயில்களுக்கு சென்றுவர சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவகைலாய கோயில்களுக்கு சென்றுவர சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வரும் மார்கழி மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் (டிச. 17, 24, 31 ஜனவரி 7) வருகின்றன. இந்த நாள்களில் தாமிரவருணிக் கரையில் அமைந்துள்ள பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, பூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய நவகைலாய கோயில்களுக்கு சென்றுவர சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை ஞாயிறுதோறும் காலை 7 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, நவகைலாய கோயில்களுக்குச் சென்றுவரும். பேருந்து கட்டணம் ரூ.325.
இந்தச் சிறப்புப் பேருந்தில் பயணிக்க, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்தில் காலை 8  முதல் மாலை 6 மணி வரை அனைத்து நாள்களிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com