எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சி: ரசிகர்கள் கௌரவிப்பு

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சி, மூத்த ரசிகர்களை கௌரவித்தல், பட்டிமன்றம் ஆகியவற்றில் ஏராள மானோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சி, மூத்த ரசிகர்களை கௌரவித்தல், பட்டிமன்றம் ஆகியவற்றில் ஏராள மானோர் பங்கேற்றனர்.
எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பாளர்கள், ரசிகர்கள் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பாளர் ப. இளமதி தலைமை வகித்தார். 1,000-க்கும் மேற்பட்ட படங்கள் இடம்பெற்ற புகைப்படக் கண்காட்சியை பா. ஆனந்தன் திறந்தார். எம்.ஜி.ஆர். உருவப்படத்தை டாக்டர் பத்ரிநாராயணன் திறந்தார். அ. பீர்முகம்மது குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். கண்காட்சியை பொதுமக்கள், ரசிகர்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.
இதையடுத்து நடைபெற்ற இசை நிகழ்ச்சியை வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.ஆர். சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். எம்.ஜி.ஆரின் மூத்த ரசிகர்களுக்கு சி.டி. குமாரப்பன் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் மு. ஆதம், எம்.ஜி.ஆர். காவியாஞ்சலி நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர், புரட்சித் தலைவரின் புகழுக்கு காரணம் கலைப் பணியா, கருணை மனமா எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதற்கு சுகி. சிவம் நடுவராக இருந்தார். இந்நிகழ்ச்சியை ஆத்தூர் மா. மணி தொடங்கி வைத்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். காணொலிக் காட்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி மு. பாலகிருஷ்ணன், நெல்லை எஸ்.எஸ். மணி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஏ.எஸ். சங்கர், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com