நெல்லையப்பர் கோயில் பத்ர தீபத் திருவிழா: 25இல் தொடக்கம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோயிலில் பத்ர தீபத் திருவிழா இம்மாதம் 25 தொடங்கி 27வரை நடைபெறுகிறது.
நெல்லையப்பர் கோயில் பத்ர தீபத் திருவிழா: 25இல் தொடக்கம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோயிலில் பத்ர தீபத் திருவிழா இம்மாதம் 25 தொடங்கி 27வரை நடைபெறுகிறது.
இக்கோயிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்ச தீபமும், ஆண்டுதோறும் பத்ர தீபமும் ஏற்றப்படுகிறது. நிகழாண்டுக்கான பத்ர தீபத் திருவிழா இம்மாதம் 25இல் தொடங்குகிறது. அன்று காலை மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கும். மேலும், விழா நடைபெறும் 3 நாள்களிலும் சுவாமி வேணுவனநாதர் (மேட்டுலிங்கம்) மூலஸ்தானத்தில் ருத்ர ஜெபம், அபிஷேக, ஆராதனை நடைபெறும்.
திருமூலமகாலிங்கம், ஸ்ரீ காந்திமதி அம்மன் மூலவர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனை நடைபெறும். அம்மன் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி-அம்மன் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறும். 26ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு மேல் இரவு 7.15 மணிக்குள் சுவாமி கோயில் மணிமண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்படும்.
27ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சுவாமி கோயில், ஸ்ரீ காந்திமதி அம்மன் கோயில், ஸ்ரீ ஆறுமுகநயினார் கோயில் ஆகியவற்றின் உள் சன்னதி, வெளிப் பிரகாரங்களில் பத்ர தீபங்கள் ஏற்றப்படும். இரவில் சுவாமி - அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், ஸ்ரீ விநாயகர் வெள்ளி மூஞ்சூறு வாகனத்திலும், ஸ்ரீ சண்முகர் தங்கச் சப்பரத்திலும், சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகளும் சிறப்பு அலங்காரத்துடன் கோயில் வெளிப் பிரகாரம் சுற்றி வருவர். இரவு 10 மணிக்கு திருநெல்வேலி நகரம் 4 ரதவீதிகளிலும் வீதியுலா வரும்.
27ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு வசந்த மண்டபத்தில் மகேஸ்வர பூஜை (அன்னதானம்) நடைபெறும். மேலும், 3 நாள்களும் இரவு 7 முதல் 10 மணிவரை நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com