"நுகர்வோருக்கு விழிப்புணர்வு அவசியம்'

ஒரு பொருளை கொள்முதல் செய்யும்போது, அதன் தரம் உள்ளிட்டவை குறித்து நுகர்வோர் முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி கே. ராஜசேகர் குறிப்பிட்டார்.

ஒரு பொருளை கொள்முதல் செய்யும்போது, அதன் தரம் உள்ளிட்டவை குறித்து நுகர்வோர் முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி கே. ராஜசேகர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி சார்பில் நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு மையம் தொடக்க விழா சட்டக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எஸ்.எம். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நுகர்வோர் விழிப்புணர்வு மையத்தை தொடங்கிவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி கே. ராஜசேகர் பேசியது:
உலக அரங்கில் 134 கோடி நுகர்வோரை கொண்ட மிகப்பெரிய நாடு இந்தியா. உலகில் பிறக்கும் அனைவரும் நுகர்வோர்தான். இன்றைய சூழலில் கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் வணிகம் செய்யப்படுகிறது. ஒரு பொருளின் தரம் போன்றவற்றை நுகர்வோர் அறியும் முன்பே, உத்தியின் மூலம் வியாபாரம் செய்யும் சூழல் நிலவுகிறது. ஒரு பொருளை கொள்முதல் செய்வதற்கு முன்பே, அதன் தரம் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும். நுகர்வோர் அனைவருக்கும் விழிப்புணர்வு மிகவும் அவசியமாகும். அதற்கு இதுபோன்ற விழிப்புணர்வு மையங்கள் பாலமாகத் திகழ வேண்டும்.
நுகர்வோர்களிடையே சட்டம் பயிலும் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது கடமை. மாணவர்களும் நுகர்வோரின் உரிமைகளை அறிந்து மக்களுக்கு உதவிட வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், நுகர்வோர் விழிப்புணர்வுக் கையேடு வெளியிடப்பட்டது.
நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஆர். நாராயணசாமி, மாவட்ட சட்ட உதவி மைய செயலரும் நீதிபதியுமான வி. ராமலிங்கம், திருச்சி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் எம். ராஜேஸ்வரன், சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் எம். கிறிஸ்துஜோதி, லட்சுமிவிஸ்வநாத் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரி உதவிப் பேராசிரியர் ராமபிரான் ரஞ்சித்சிங், மையத்தின் நோக்கம் குறித்துப் பேசினார்.  உதவிப் பேராசிரியை பி. சண்முகப்பிரியா வரவேற்றார். உதவிப் பேராசிரியை டி. ஜீவரத்தினம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com