அப்துல்கலாம் நினைவு நாள்: திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மெளன ஊர்வலம்

இந்திய குடியரசு முன்னாள் தலைவர் ஏபிஜெ.அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு

இந்திய குடியரசு முன்னாள் தலைவர் ஏபிஜெ.அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தினமணி நாளிதழ் மற்றும் அந்தந்த பகுதி கல்வி நிறுவனங்கள் இணைந்து மெளன ஊர்வலங்கள் வியாழக்கிழமை (ஜூலை 27) நடைபெற உள்ளது.
திருநெல்வேலியில்...
தினமணி நாளிதழ், பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி சார்பில் ஏபிஜெ.அப்துல்கலாம் நினைவு மெளன ஊர்வலம் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை (ஜூலை 27) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. வ.உ.சி. மைதானத்தில் இருந்து தொடங்கும் ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். ஸ்காட் கல்விக் குழுமங்களின் தலைவர் கிளிட்டஸ் பாபு முன்னிலை வகிக்கிறார். முக்கிய வீதிகள் வழியாக செல்லும் ஊர்வலம் மீண்டும் மைதானத்தை அடைகிறது.
  இதேபோல தினமணி நாளிதழ், மாநாகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் ஏபிஜெ.அப்துல்கலாம் நினைவு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
கடையநல்லூரில்...
தினமணி நாளிதழ், ஹரிணி வித்யாலயா பள்ளியில் ஏபிஜெ.அப்துல்கலாம் நினைவு இரங்கல் கூட்டம், மெளன அஞ்சலி நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.  பாத்திமா மருந்தியல் கல்லூரி சார்பில் முற்பகல் 11 மணிக்கு மெளன ஊர்வலம் நடைபெறுகிறது. கல்லூரித் தாளாளர் காஜா தொடக்கி வைக்கிறார்.  முக்கிய வீதிகள் வழியாக செல்லும் ஊர்வலம் மீண்டும் கல்லூரியை அடைகிறது.
 இலஞ்சியில்...
தினமணி நாளிதழ் மற்றும் ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி ஆகியவை சார்பில் ஏபிஜெ.அப்துல்கலாம் நினைவு மெளன ஊர்வலம் காலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இலஞ்சி கல்விச் சங்கத் தலைவர் பிச்சையா தொடங்கிவைக்கிறார்.  
ஆலங்குளத்தில்...
தினமணி நாளிதழ் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் ஏபிஜெ.அப்துல்கலாம் நினைவு மெளன ஊர்வலம் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. ஆலங்குளம் காவல் ஆய்வாளர் ஐயப்பன் தொடக்கி வைக்கிறார்.
கடையத்தில்...
தினமணி நாளிதழ் மற்றும்  சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளி சார்பில் ஏபிஜெ.அப்துல்கலாம் நினைவு மெளன ஊர்வலம் மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. கடையம் காவல் நிலைய ஆய்வாளர் பால்ராஜ் தொடங்கிவைக்கிறார்.
புதுச்சுரண்டையில்...
தினமணி நாளிதழ் மற்றும் டிடிடிஏ நடுநிலைப் பள்ளி சார்பில் ஏபிஜெ.அப்துல்கலாம் நினைவு மெளன ஊர்வலம் முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. வியாபாரிகள் சங்கத் தலைவர் காமராஜ் தொடங்கிவைக்கிறார்.
வாசுதேவநல்லூரில்...
தினமணி நாளிதழ் மற்றும் தங்கப்பழம் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ஏபிஜெ.அப்துல்கலாம் நினைவு மெளன ஊர்வலம்  காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர் எஸ்.தங்கப்பழம் தொடங்கிவைக்கிறார்.
பண்பொழியில்...
தினமணி நாளிதழ் மற்றும் பிரஷர் ஐலேன்ட் பள்ளி சார்பில் ஏபிஜெ.அப்துல்கலாம் நினைவு மெளன ஊர்வலம்  காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.
வள்ளியூரில்...
தினமணி நாளிதழ் மற்றும் பல்வேறு பள்ளிகள் சார்பில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஏபிஜெ.அப்துல்கலாம் நினைவு மெளன ஊர்வலத்தை ஜி.எம்.மருத்துவமனையின் உரிமையாளர் மருத்துவர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். ரட்சனிய சேனை பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கும் ஊர்வலம் வள்ளியூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைகிறது.
சங்கரன்கோவிலில்...
தினமணி நாளிதழ் மற்றும் கோமதியம்பாள் மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் ஏபிஜெ.அப்துல்கலாம் நினைவு மெளன ஊர்வலம் காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. சங்கரன்கோவில் நகராட்சி ஆணையர் தானுமூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். திருவேங்கடம் சாலையில் தொடங்கும் ஊர்வலம் தேரடித் திடலில் நிறைவடைகிறது.
களக்காட்டில்...
தினமணி நாளிதழ் மற்றும் மீரானியா மேல்நிலைப் பள்ளி சார்பில் ஏபிஜெ.அப்துல்கலாம் நினைவு மெளன ஊர்வலம் காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. பள்ளித் தாளாளர் முகம்மது சாதி தொடங்கிவைக்கிறார்.
டி.என்.புதுக்குடியில்...
தினமணி நாளிதழ் மற்றும் பரமானந்தா நடுநிலைப் பள்ளி சார்பில் ஏபிஜெ.அப்துல்கலாம் நினைவு மெளன ஊர்வலம் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. பள்ளித் தலைமையாசிரியர் செல்வசுகுணா தொடங்கிவைக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com