நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் கக்கன் பிறந்த நாள் விழா

தமிழக முன்னாள் அமைச்சர் கக்கனின் பிறந்த நாள் விழா கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக முன்னாள் அமைச்சர் கக்கனின் பிறந்த நாள் விழா கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர்கள் சுந்தரராஜ பெருமாள், கே.ராம்நாத், உமாபதி சிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.ராமசுப்பு ஆகியோர் கக்கன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேல்துரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கரிசல் மு.சுரேஷ், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலர் டி.காமராஜ், ராஜேஷ்முருகன், பைபாஸ் சண்முகவேலன், தருவை காமராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com