குடிநீர், தெருவிளக்கு வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

குடிநீர், தெருவிளக்கு வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

குடிநீர், தெருவிளக்கு வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்து மனுக்களைப் பெற்றார்.
இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் திருநெல்வேலி அருகேயுள்ள குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். தொடர்ந்து ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனு:
குன்னத்தூர் கிராமத்தில் 3 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் உள்ள தெரு, கழிவுநீர் ஓடைகளை தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள்தான் செய்ய வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள்.  துப்புரவுப் பணியாளர்களை நியமிக்காமல் காலதாமதம் செய்து வருகிறார்கள். வாய்க்கால் பாலம் பகுதி, காமராஜர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள சிறுமின்விசை குடிநீர்த் தொட்டிகள், ஆழ்துளைக் குழாய்கள் போன்றவை பழுதாகி சீரமைக்கப்படாமல் உள்ளன. குல வேளாளர் தெரு, காமராஜர் தெரு, காளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள் நடந்து செல்ல அஞ்சும் நிலை உள்ளது.
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத கிராமமாக குன்னத்தூர் உள்ளது. இங்கு கூடுதலாக துப்புரவுப் பணியாளர்களை நியமிக்கவும், குடிநீர்த் தொட்டிகளைப் பழுதுபார்க்கவும், சாமிநாதபுரம் அருகேயுள்ள பழமையான கிணறை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com