நெல்லையப்பர் கோயிலில் உண்டியல் வசூல் ரூ. 8.67 லட்சம்: 37 கிராம் தங்கம், 55 கிராம் வெள்ளியும் காணிக்கை

அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்தியம்பாள் திருக்கோயிலில் திங்கள்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்தியம்பாள் திருக்கோயிலில் திங்கள்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், ரூ.8.67 லட்சம் ரொக்கம், 37 கிராம் தங்கம், 55 கிராம் வெள்ளி காணிக்கையாக இருந்தது.
இக்கோயிலில் மாதந்தோறும் ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும். கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தின் அனைத்து சன்னதிகளிலும் உள்ள உண்டியல்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
மேலும், இக் கோயிலுடன் இணைந்த புட்டாரத்தி அம்மன் கோயில், ஈசான விநாயகர் கோயில், அம்பல விநாயகர் கோயில், தேரடி கருப்பசாமி கோயில், சங்கிலி பூதத்தார் கோயில், கம்பாநதி காமாட்சியம்மன் கோயில் என மொத்தம் 27 உண்டியல்கள் திறக்கப்பட்டன.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, கோயில் செயல்அலுவலர் ரோஷினி ஆகியோரது முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதில், கோயில் பணியாளர்கள், பக்தர்கள், சிவனடியார்கள் கலந்துகொண்டு காணிக்கைகளை எண்ணினர். ரொக்கமாக ரூ. 8 லட்சத்து 67 ஆயிரத்து 982, தங்கம் 37 கிராம், வெள்ளி 55 கிராம் இருந்தது.

பழைய ரூ. 1000, 500  நோட்டுகள்!
ஜூன் 19ஆம் தேதி திறக்கப்பட்ட உண்டியல்களில் பழைய ரூ.1000 நோட்டுகள் 5 மற்றும் ரூ. 500 நோட்டுகள் 36 இருந்தன.
இதுதொடர்பாக, கோயில் செயல் அலுவலர் ரோஷினி கூறியது:
உண்டியல் திறப்பில் பழைய ரூபாய் நோட்டுகளையும் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருப்பது தெரியவந்தது. இவற்றின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்து, ரிசர்வ் வங்கிக்கும், அரசுக்கும் அறிக்கை அனுப்பப்படும். ரிசர்வ் வங்கியின் முடிவுப்படி இந்நோட்டுகள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com