பாளை.யில் அம்மன் சப்பரங்கள் வீதியுலா

பாளையங்கோட்டையில் தேவி உச்சினிமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி விநாயகர் மற்றும் 6 அம்மன் சப்பரங்கள் வீதியுலா நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
பாளை.யில் அம்மன் சப்பரங்கள் வீதியுலா

பாளையங்கோட்டையில் தேவி உச்சினிமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி விநாயகர் மற்றும் 6 அம்மன் சப்பரங்கள் வீதியுலா நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 24ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 25ஆம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன. திங்கள்கிழமை அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜையும், நாடி சந்தானம், யாக சாலையில் இருந்து கும்பம் எழுந்தருளல் நடைபெற்றது.
அதன்பின்பு மூலவர் விமானம், விநாயகர் உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் பிரசன்ன பூஜை, தீபாராதனையும், இரவில் பால விநாயகர், ஆயிரத்தம்மன், பேராட்சி அம்மன், முப்பிடாதி அம்மன், முத்தாரம்மன், உச்சினி மாகாளி அம்மன், தூத்துவாரி அம்மன் ஆகிய தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி, மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com