தாமிரவருணி நீர் வழங்க எதிர்ப்பு: தமாகா ஆர்ப்பாட்டம்

குளிர்பான ஆலைகளுக்கு தாமிரவருணி தண்ணீர் வழங்க எதிர்ப்புத் தெரிவித்து பாளையங்கோட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குளிர்பான ஆலைகளுக்கு தாமிரவருணி தண்ணீர் வழங்க எதிர்ப்புத் தெரிவித்து பாளையங்கோட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தாமிரவருணியில் இருந்து தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் வழங்க வேண்டும். குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலப் பணியை விரைவாக தொடங்க வேண்டும்.
 மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும். வறட்சியால் இறந்த விவசாயிகள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி அருகில் இயங்கும் மதுக்கடைகளை மூட வேண்டும். தாமிரவருணி கரையில் மதுக்கடைகளை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மகளிரணிச் செயலர் எஸ். கோமதிசண்முகம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை கட்சியின் மாநிலச் செயலர் என்.டி.எஸ். சார்லஸ் தொடங்கிவைத்தார். கட்சியின் மத்திய மாவட்டத் தலைவர் சுத்தமல்லி முருகேசன், கிழக்கு மாவட்டத் தலைவர் ஜோதி, மேற்கு மாவட்டத் தலைவர் அய்யாத்துரை, மாநிலச் செயலர்கள் ஏ.பி. சரவணன், சிந்தாசுப்பிரமணியன், மாநில சிறுபான்மை அணி துணைத் தலைவர் ரமேஷ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com