பூரண மதுவிலக்கு கோரி நாளை உண்ணாவிரதம்: குமரிஅனந்தன் பங்கேற்பு

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள், பெண்கள் இணைந்து பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள், பெண்கள் இணைந்து பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
அனைத்து காந்திய பேரைவ நிறுவனங்கள், இலக்கிய தொண்டு நிறுவனங்கள், சமூக நல சேவை மையங்கள், பல்வேறு மகளிர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் இணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளன. பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் நடைபெறும். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தலைமை வகிக்கிறார். மாநில காந்திப் பேரவைச் செயலரும், தேசிய நல்லாசிரியருமான சு. செல்லப்பா வரவேற்கிறார்.
50-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசுகின்றனர். ஏற்பாடுகளை, தேசிய நல்லாசிரியர் செல்லப்பா, மாநில காந்தி பேரவை இணைச் செயலர் காஜா முகைதீன், காந்தியவாதிகள் ஆறுமுகம், எஸ். முத்துசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com