நெல்லை அருகே திருத்து கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் சமுதாயக் கூடம்: கட்டுமானப் பணிகளை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருநெல்வேலியை அடுத்த திருத்து கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் புதிதாக கட்டப்படும் சமுதாயக் கூடம் கட்டுமானப் பணிகளை ஆட்சியர் மு.கருணாகரன், வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலியை அடுத்த திருத்து கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் புதிதாக கட்டப்படும் சமுதாயக் கூடம் கட்டுமானப் பணிகளை ஆட்சியர் மு.கருணாகரன், வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
பாளை. ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட, கீழப்பாட்டம் ஊராட்சியில் உள்ளது திருத்து கிராமம். இந்த கிராமத்தில் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்புதல் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டப்படவுள்ளது. தரைத் தளம் 1,753 சதுர அடி, முதல் தளம் 1,342 சதுர அடியில் கட்டப்படும் இதன் கட்டுமானப் பணிகளை ஆட்சியர் மு.கருணாகரன், வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர்,அவர் கூறியது:
திருத்து கிராமத்தில் சமுதாயநலக் கூடம் கட்டப் படுவதைப் போன்று புதிய பகுதிநேர நியாய விலைக் கடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மருதூர் கிராமத்தில் நடைபெறும் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இக் கிராமத்துக்கு சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனைத்து சிறப்புத் திட்டங்களும் திருத்து கிராம மக்களுக்கு கிடைக்க ஆவன செய்யப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன், பாளையங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுககனி, சண்முகதாய், ஒன்றியப் பொருளாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com