சேவியர் காலனி தேவாலயத்தில் முதலாவது பிரதிஷ்டை பண்டிகை

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சேவியர் காலனியில் உள்ள தூய பேதுரு ஆலயத்தில் முதலாவது பிரதிஷ்டை பண்டிகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சேவியர் காலனியில் உள்ள தூய பேதுரு ஆலயத்தில் முதலாவது பிரதிஷ்டை பண்டிகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேலப்பாளையம் சேகரத்துக்குள்பட்ட இந்த ஆலயத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் ஆலயம் புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இதன்பின்பு முதலாவது பிரதிஷ்டை பண்டிகையொட்டி புதன்கிழமை பெண்கள் பண்டிகை நடைபெற்றது. எமி ஸ்டீபன் செய்தி அளித்தார். மாலையில் ஆயத்த ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலையில் பரிசுத்த திருவிருந்து ஆராதனையும், காணிக்கை படைத்தலும் நடைபெற்றன. ஏ.சாமுவேல் செய்தியளித்தார். பின்னர் அசன விருந்தும், ஸ்தோத்திர ஜெப பிரார்த்தனையும் நடைபெற்றன.
ஏற்பாடுகளை சேகரகுரு ஏ.கிப்சன் ஜான்தாஸ், உதவி குரு ஜேக்கப் சுதந்திரராஜ், சபை ஊழியர் பி.கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் செய்திருந்தனர். தொடர்ந்து 28ஆம் தேதி நடைபெற உள்ள நன்றி ஆராதனையில் ஏ.டேனியல்ராஜ் விவிலிய செய்தி அளிக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com