நூலகத் துப்புரவுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை

நூலகங்களில் பணியாற்றிவரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு பொதுநூலகப் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நூலகங்களில் பணியாற்றிவரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு பொதுநூலகப் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்ட மனு: தமிழகத்தில் அரசுப் பொதுநூலகங்களில் பணியாற்றிவரும் பகுதிநேர துப்புரவுப் பணியாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி 15.9.2010முதல் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது.
காலை, மாலை நேரங்களில் நூலகர்களுடன் இணைந்து பணியாற்றிவரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மிகக் குறைந்த சிறப்பு காலமுறை ஊதியமே வழங்கப்படுகிறது. அவர்களில் பலர் குறைந்தபட்ச கல்வி முதல் முதுநிலைப் பட்டம் வரை படித்துள்ளனர். மேலும் நூலகக் கல்வியும் படித்தோராக உள்ளனர்.
எனவே, 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு கல்வி, நூலகக் கல்வி, வயதுத் தகுதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஊர்ப்புற நூலர்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் 3ஆம் நிலை நூலகர் பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர்.
பகுதிநேர நூலகர்களுக்கு ஊர்ப்புற நூலகர் பதவி உயர்வு அளிக்க வேண்டும். உரிய தகுதி இருந்தும் பதவி உயர்வின்றி தொடர்ந்து துப்புரவுப் பணியாளர்களாகவே உள்ளனர். இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com