மும்பை ரயிலில் தவறவிட்ட 35 பவுன் நகை, பணம் மீட்பு

மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த விரைவு ரயிலில் 35 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்களுடன் தவறவிட்ட பெட்டியை போலீஸார் மீட்டு உரியவரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.

மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த விரைவு ரயிலில் 35 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்களுடன் தவறவிட்ட பெட்டியை போலீஸார் மீட்டு உரியவரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.
மும்பை தாராவியில் வசிப்பவர் கணேஷ்பாண்டி மனைவி கல்பனா (25). இவர் தனது தாய்மாமா முருகன், அத்தை கஸ்தூரி, தாத்தா முருகையா, மகன் அரவிந்தன் ஆகியோருடன் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் சாம்பவர்வடகரையிலுள்ள கோயில் கொடைவிழாவில் கலந்து கொள்வதற்காக மும்பை-நாகர்கோவில் விரைவு ரயிலில் திருநெல்வேலிக்கு வந்தார்.
இவர்கள் ரயிலில் எஸ்-7 பெட்டியில் பயணம் செய்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 1.50 மணிக்கு திருநெல்வேலி ரயில் சந்திப்பு ரயில் வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் இறங்கிய கல்பனா, தான் கொண்டு வந்த சூட்கேஸை காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். சூட்கேஸில் 35 பவுன் தங்க நகைகள், ரொக்கப் பணம் ரூ. 10 ஆயிரம் மற்றும் உடைகள், பொருள்கள் இருந்தனவாம். இதுகுறித்து கல்பனா சந்திப்பு ரயில்வே காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ரயில்வே ஆய்வாளர் மு. குருசாமி, உதவி ஆய்வாளர் டி. ஜோசப் ஆகியோர், ரயில் எஸ் 7 பெட்டியில் பயணம் செய்த அனைவரது ரயில்வே பி.என்.ஆர். எண்களை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
முன்பதிவு டிக்கெட்டில் கிடைத்த மும்பையை சேர்ந்த ஒருவரின் செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், சேரன்மகாதேவியை சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பத்தினருடன் மும்பையிலிருந்து இதே ரயிலில் பயணம் செய்தார் என்றும், அவர்களிடம் கூடுதலாக ஒரு சூட்கேஸ் இருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக ரயில்வே போலீஸார் சேரன்மகாதேவிக்கு சென்று அக்குடும்பத்தினரிடம் இருந்த சூட்கேஸை மீட்டு தவறவிட்ட கல்பனா குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com