29 திருநங்கைகளுக்கு ரூ. 90.48 லட்சத்தில் வீடுகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநங்கைகள் 29 பேருக்கு ரூ. 90.48 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநங்கைகள் 29 பேருக்கு ரூ. 90.48 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
அரசு திருநங்கைகளின் பொருளாதாரம் மேம்பாடும் வகையில் மானிய கடனுதவி, திறன்வளர்ப்பு பயிற்சி என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
அதன்ஒருபகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு சமூகநலத்துறையின் மூலம் 85 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் ரூ. 1 லட்சம் செலவில் திறன் வளர்ப்பு பயிற்சியும், ரூ. 50 ஆயிரம் செலவில் விழிப்புணர்வு பயிற்சியும் அளிக்கப்பட்டன. சுயதொழில் தொடங்கிட 5 பேருக்கு தலா ரூ. 20 ஆயிரம் மதிப்பில் கறவை மாடு, 4 பேருக்கு தையல் இயந்திரங்கள் போன்றவை வழங்கப்பட்டன.
மானூர் ஒன்றியம், நரசிங்கநல்லூர் ஊராட்சியில் ஒரே இடத்தில் 29 பேருக்கு கூடங்குளம் சுற்றுப்புற மேம்பாட்டுத் திட்ட உபரி நிதியிலிருந்து தலா ரூ. 3.12 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.90.48 லட்சத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன என செய்தி மக்கள்தொடர்பு அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com