பள்ளிவாசல்களில் ரமலான் நோன்பு திறப்பு

திருநெல்வேலி மாவட்ட பள்ளிவாசல்களில், ரமலான் முதல் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட பள்ளிவாசல்களில், ரமலான் முதல் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் புனித கடமைகளின் ஒன்றான ரமலான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையடுத்து முஸ்லிம்கள் அதிகாலையில் சஹர் உணவு உண்டு  நோன்பினை கடைப்பிடித்தனர்.
இதையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நோன்பு கஞ்சி தயாரித்து விநியோகம் செய்யப்பட்டது. மாலை 6.34 மணிக்கு பள்ளிவாசல்களில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பு பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜமாஅத் தலைவர் நியமத்துல்லாஹ், செயலர் வருசை முகைதீன், பொருளாளர் முகம்மது இபுராஹீம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல், வி.எஸ்.டி. பள்ளிவாசல், கடையப்பள்ளிவாசல் உள்பட 50-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களிலும், பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பள்ளிவாசல், திருநெல்வேலி நகரம், பேட்டை, ஏர்வாடி, கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, பத்தமடை, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், முதலியார்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நோன்பு திறக்கும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com