நெல்லையில் போக்குவரத்து மாற்றம்
By DIN | Published on : 11th November 2017 02:22 AM | அ+அ அ- |
திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். இதையடுத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புறநகர் பேருந்துகள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தென்காசி, சேரன்மகாதேவி, பேட்டை பகுதிகளில் இருந்துவரும் புறநகர் பேருந்துகள் திருநெல்வேலி நகரத்தில் உள்ள தொண்டர் சன்னதி, சாலியர் தெரு, ராமையன்பட்டி விலக்கு, தச்சநல்லூர் சந்திமறிச்சம்மன் கோயில், தச்சநல்லூர் வடக்குப் புறவழிச்சாலை, மணிமூர்த்தீஸ்வரம், வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம், ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையம் வழியாக புதிய பேருந்துநிலையம் சென்றடைய வேண்டும்.
புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி, சேரன்மகாதேவி, பேட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையம், அண்ணாசாலை, ரோஸ் மஹால், அறிவியல் மையம், கொக்கிரகுளம், சந்திப்பு, திருநெல்வேலி நகரம் ஆர்ச், தெற்கு மவுண்ட்ரோடு, காட்சி மண்டபம் வழியாக செல்ல வேண்டும்.
திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரும் பேருந்துகள், சீனிவாசநகர் லட்சுமி மஹால், மேட்டுத்திடல் ரவுண்டானா, பாளை பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையம் சென்றடைய வேண்டும்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடிசெல்லும் பேருந்துகள் பாளை பேருந்து நிலையம், மேட்டுத்திடல் ரவுண்டானா, சீனிவாச நகர் ரவுண்டானா வழியாக செல்லவேண்டும்.
நகர பேருந்துகள்...
நகர பேருந்துகள் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து ராம் தியேட்டர், மணிமூர்த்தீஸ்வரம், வடக்கு புறவழிச்சாலை, வண்ணார்ப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் மேல் பகுதி, ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையம் சென்றடைய வேண்டும். இப்போக்குவரத்து மாற்றம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை வரை அமலில் இருக்கும் என நெல்லை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.