ஐசிடிசி இலச்சினை வடிவமைப்புப் போட்டி

தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை சேவை (ஐசிடிசி) என்ற நம்பிக்கை மையங்கள் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை சேவை (ஐசிடிசி) என்ற நம்பிக்கை மையங்கள் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி புதிய இலச்சினை (லோகோ), சொற்றொடர் உருவாக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐசிடிசி திட்ட இயக்குநர் மருத்துவர் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ஐசிடிசி மையம் 1997ஆம் ஆண்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 2,164 ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்களும், 16 நடமாடும் மையங்களும் செயல்படுகின்றன. 
இவற்றின் மூலம் எச்.ஐ.வி. பாதிப்புகள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை, சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 40 லட்சம் பேர், கருவுற்ற தாய்மார்கள், இலக்கு மக்களுக்கு பரிசோதனை, ஆலோசனை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் இம்மையங்கள் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இலச்சினை, சொற்றொடர் வடிவமைக்கும் போட்டி நடத்தப்படுகிறது. இலச்சினை 8-க்கு 11 அங்குலம் (இஞ்ச்) அளவில் இருக்க வேண்டும். ஜிப், ஜெபேக், பிடிஎப் கோப்பாக இருக்க வேண்டும். சொற்றொடர் 6 வார்த்தைகளுக்கு மிகாமலிருக்க வேண்டும். படைப்புகளை IC​T​C20​Y​E​A​R​S@​G​M​A​I​L.​C​O​M  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் இலச்சினை, சொற்றொடர் தமிழகத்தில் உள்ள அனைத்து ஐசிடிசி மையங்களிலும் காட்சிப்படுத்தப்படும். சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினமான டிசம்பர் 1ஆம் தேதி வழங்கப்படும். இலச்சினை, சொற்றொடர்களை அனுப்ப இம்மாதம் 27 கடைசி நாள் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com