கொலை வழக்கு: சுபாஷ் பண்ணையார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

பாளையங்கோட்டையில் நிகழ்ந்த கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ்பண்ணையார் தேடப்படும் குற்றவாளியாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டையில் நிகழ்ந்த கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ்பண்ணையார் தேடப்படும் குற்றவாளியாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல்துறை வட்டாரங்கள் கூறியது: தூத்துக்குடி மாவட்டம், பழைய காயல் அருகேயுள்ள புல்லாவெளி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்ற சிங்காரம் (50). தேவேந்திர குலவேளாளர் அமைப்பின் நிறுவனர், தலைவர் பசுபதிபாண்டியனின் ஆதரவாளர்.  இவரை வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போலீஸார் தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றபோது கே.டி.சி. நகரில் வைத்து மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இவ் வழக்கு விசாரணை திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ் வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் கச்சேரி தெருவைச் சேர்ந்த அசுபதி பண்ணையார் மகன் ஏ.சிவசுப்பிரமணியன் என்ற சுபாஷ் பண்ணையார் நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்ற இயலாத வகையில் தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால் அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 0462-2568037 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுவதோடு தக்க சன்மானமும் வழங்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com