விழிப்புணர்வுப் பேரணி

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி,  கையெழுத்து இயக்கம், மீட்பு ஒத்திகை ஆகியவை  நடைபெற்றன.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி,  கையெழுத்து இயக்கம், மீட்பு ஒத்திகை ஆகியவை  நடைபெற்றன.
பாளையங்கோட்டை வ.உசி. மைதானத்திலிருந்து தொடங்கிய பள்ளி மாணவர், மாணவிகளின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம் தொடங்கிவைத்தார். இப்பேரணி லூர்துநாதன் சிலை வழியாக தெற்கு பஜார்,  குழந்தையேசு மேல்நிலைப் பள்ளி வரை சென்று நிறைவு பெற்றது. இதன் தொடர்ச்சியாக,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கிவைத்தார். தொடர்ந்து,  சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பேரிடர் காலங்களில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகையும் நிகழ்த்தி காட்டப்பட்டது.
நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் மைதிலி,  மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயபாண்டி, வட்டாட்சியர் தங்கராஜ், பேரிடர் பயிற்சியாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com