கிராம நிர்வாக அலுவலர்கள், ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி திருநெல்வேலியில் கிராம நிர்வாக அலுவலர்கள், ஓய்வூதியர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி திருநெல்வேலியில் கிராம நிர்வாக அலுவலர்கள், ஓய்வூதியர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்துசெய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டும். 8ஆவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதுவரையில் 1.1.2016 முதல் இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிராம நிர்வாக அலுவலர்கள்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கே. முத்துச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி. குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் அருள்மாரி, துணைத் தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். மறியலில் ஈடுபட்டு சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். பின்னர், போலீஸாரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து திருநெல்வேலி கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பிய பிறகு கலைந்து சென்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் பாலுசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பூ. கோபாலன் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சலீம், அபுபக்கர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 30 நிமிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com