ஆன்-லைன் பத்திரப் பதிவு: ஆவண எழுத்தர்களுக்கு பயிற்சி

ஆன்-லைன் மூலம் பத்திரப் பதிவு கட்டாயமாக்கப்படுவதால் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள திருநெல்வேலி, சேரன்மகாதேவி பதிவு மாவட்டத்தைச் சேர்ந்த ஆவண எழுத்தர்கள்,

ஆன்-லைன் மூலம் பத்திரப் பதிவு கட்டாயமாக்கப்படுவதால் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள திருநெல்வேலி, சேரன்மகாதேவி பதிவு மாவட்டத்தைச் சேர்ந்த ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள், தொடர்புடைய பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை இந்தப் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து திருநெல்வேலி மண்டல பதிவுத் துறை துணைத் தலைவர் இ. அருள்சாமி பேசியது:
தமிழகத்தில் மாவட்ட பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்கள் என மொத்தம் 51 அலுவலகங்களில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை ஆக.1முதல் தொடங்கியுள்ளன. திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 7 மாவட்ட பதிவாளர் அலுவலகம், 85 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், திருநெல்வேலி நகரம், கடையம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டம் கீழூர் ஆகிய அலுவலகங்களில் ஆன்-லைன் பதிவு நடைபெறுகிறது. வள்ளியூர், பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் அலுவலகங்களில் செப்டம்பர் 18 முதல் அமல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தின் 578 அலுவலகங்களிலும் நவம்பர் முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது.
இதன் மூலம், நாளொன்றுக்கு 100 பத்திரங்கள் வரை பதிவு செய்யலாம். ஒரு பத்திரம் பதிவு செய்ய 30 நிமிடங்களுக்குள் பரிவர்த்தனைகளை முடித்துவிடலாம். சொத்துப் பதிவு, வில்லங்க சான்று, பாகப் பிரிவினை, தானப்பத்திரம், சொத்து விற்பனை, பாக உடன்படிக்கை, திருமணப் பதிவு, சங்கப் பதிவு என 36 வகையான பதிவுகளை ஆன்-லைன் மூலம் மேற்கொள்ளலாம். இதன் மூலம் போலிப் பத்திரங்கள் ஒழிக்கப்படும். தவறுகள், பிழைகளுக்கு இடம் இருக்காது. பணிகளும் விரைந்து முடியும். ஆவணங்களும் கணினிமயமாகும் என்றார் அவர்.
இந்தப் பயிற்சி வகுப்பில், மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்கள், பத்திரப்பதிவு எழுத்தர்கள், வழக்குரைஞர்கள், கணினி இயக்குபவர்கள், உதவியாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com