"பல்கலை. கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்'

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கச் செயலர் உச்சிமாகாளி கூறியது: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த ஆண்டு தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியது. மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக கட்டணம் குறைக்கப்பட்டது. தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றம் நிர்ணயித்துள்ள கட்டணமே தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் உள்ளது. ஆனால், சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மட்டும் தன்னிச்சையாக கட்டண உயர்வை அமல்படுத்துகிறார்கள்.
பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறை படி தேர்வுக் கட்டணம் 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் உயர்த்தப்பட  வேண்டும். அதனை மீறி ஆண்டுதோறும் கட்டண உயர்வை அமல்படுத்தி வருவதன் மூலம் கல்வியை வணிக மயமாக்கும் முயற்சியாகவே பார்க்கமுடிகிறது. உயர்த்தியுள்ள கட்டணத்தைத் திரும்ப பெறக் கோரி தமிழக ஆளுநர், முதல்வர், கல்வித் துறை அதிகாரிகள், துணைவேந்தருக்கு மனு அனுப்பியுள்ளோம். இதுதொடர்பாக, நடவடிக்கை எடுக்காவிட்டால் மாணவர்களைத் திரட்டி வகுப்பு புறக்கணிப்பு, உள்ளிருப்பு போராட்டம் போன்றவற்றில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com