மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து, பாளையங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து, பாளையங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் முடங்கி விட்டன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சாதாரண மக்கள் அத்தியாவசியப் பொருள்களுக்கு வரி செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தொகுதித் தலைவர் மின்னத்துல்லாஹ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஹயாத்முகம்மது, நிர்வாகிகள் அரசன் ஷேக், பாளை முஹம்மது, சமீர், பர்கிட் முஹம்மதுகாசிம் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை மண்டலத் தலைவர் ஜெ. ஜாபர்அலி தொடங்கிவைத்தார். மாவட்ட துணைத் தலைவர் கே.எஸ். சாகுல்ஹமீது உஸ்மானி, மருத்துவரணி தலைவர் நெல்லை நிஜாம், மாவட்டப் பொருளாளர் முல்லை மஜித், தொழிற்சங்க மாவட்டத் தலைவர் ஹைதர்அலி, துணைத் தலைவர் கல்வத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com