தடையை மீறி ஆர்ப்பாட்டம்: தமுமுகவினர்120 பேர் கைது

திருநெல்வேலி நகரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 120 பேரை போலீஸார்

திருநெல்வேலி நகரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 120 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், "காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் ஆசிபா என்ற சிறுமியை பாலியல் வன்முறை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
வாகையடிமுனையில்  தமுமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன், மாவட்டச் செயலர் ஐ.உஸ்மான்கான், மாவட்டப் பொருளாளர் எஸ்.சுல்தான், மாநிலச் செயலர் எஸ்.மைதீன்செட்கான் உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏற்கெனவே, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்ததால்,  போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையர் மாரிமுத்து தலைமையிலான போலீஸார்  கைது செய்தனர்.
பேட்டையில் மமமுக போராட்டம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஜெய்லானி, மாவட்டச் செயலர் ராஜமுகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் முஸ்தபா சிறப்புரையாற்றினார். குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com