ராயகிரி கண்மாய் மராமத்துப் பணி

ராயகிரி பேரூராட்சிக்குள்பட்ட வேப்பங்குளம் கண்மாய் மராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். 

ராயகிரி பேரூராட்சிக்குள்பட்ட வேப்பங்குளம் கண்மாய் மராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். 
விவசாயத்துக்கு முக்கிய ஆதாரமாகத் திகழும் ராயகிரி பேரூராட்சிக்குள்பட்ட வேப்பங்குளம் கண்மாயை மராமத்து செய்யவேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் நீண்டநாள்களாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து, மேற்படி கண்மாய் மராமத்துப் பணியை சென்னை லினெக்ஸ் நிறுவன நிதி உதவியுடன் ராம் சாரிட்டபிள் டிரஸ்ட் ஏற்றுச்செய்வதற்குத் தயாரான நிலையில், அதற்கான அனுமதியை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ். கடந்த 3ஆம் தேதி தொடங்கிய இப்பணிகளனைத்தும் சனிக்கிழமை நிறைவடைந்தது. இந்நிலையில், அதன் நிறைவு விழாவில் பங்கேற்ற ஆட்சியர், முன்னதாக வேப்பங்குளம் கண்மாய்க்கு நேரில் சென்று செய்து முடித்த மராமத்துப் பணிகளைப் பார்வையிட்டார். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அலுவலர்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்டறிந்தார். 
அதன்பிறகு, ராயகிரி பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவியருக்குப் பரிசுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சுழல் நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள்களை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில், பணிநிறைவு ஆட்சியர் லட்சுமிகாந்தன்பாரதி, தென்காசி முன்னாள் எம்எல்ஏ வெங்கட்ரமணா, சிவகிரி வட்டாட்சியர் செல்வசுந்தரி, ராயகிரி பேரூராட்சி செயல் அலுவலர் க. வெங்கடகோபு, வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com