வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 10 ஆயிரம் சப்பாத்திகள்

திருநெல்வேலியிலிருந்து கேரளத்துக்கு 10 ஆயிரம் சப்பாத்திகள் தயாரித்து அனுப்பப்படவுள்ளது. முதல் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை 3 ஆயிரம் சப்பாத்திகள் அனுப்பப்படுகிறது. 

திருநெல்வேலியிலிருந்து கேரளத்துக்கு 10 ஆயிரம் சப்பாத்திகள் தயாரித்து அனுப்பப்படவுள்ளது. முதல் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை 3 ஆயிரம் சப்பாத்திகள் அனுப்பப்படுகிறது. 
கேரளத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்துவரும் மழையால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் தங்களின் உடமைகளை இழந்து உண்ண உணவும், குடிநீரும் இன்றி தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து கேரள மக்களுக்கு சப்பாத்திகளை அனுப்ப முடிவு செய்துள்ளனர். அவர்கள் தங்களுக்குள்ளேயே பணம் பிரித்ததோடு, கோதுமை மாவு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை நன்கொடையாகவும் பெற்றனர். 
முதற்கட்டமாக சுமார் 3 ஆயிரம் சப்பாத்திகளை தயார் செய்யும் பணியில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் சனிக்கிழமை இரவு முழுவதும் ஈடுபட்டனர். 
இந்த சப்பாத்திகள் செஞ்சிலுவை சங்கம் மூலம் கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்படுகிறது. ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை இரவில் 7 ஆயிரம் சப்பாத்திகளை தயார் செய்து அனுப்பவுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்பகுதி மக்கள் 10 ஆயிரம் சப்பாத்திகளை தயார் செய்து அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com