நடுப்பிள்ளையார்குளம் மக்கள் மீண்டும் முற்றுகைப் போராட்டம்

காவல் துறையினரின் நடவடிக்கையை கண்டித்து மானூர் அருகேயுள்ள நடுப்பிள்ளையார்குளம் கிராம மக்கள் 2 ஆவது நாளாக ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

காவல் துறையினரின் நடவடிக்கையை கண்டித்து மானூர் அருகேயுள்ள நடுப்பிள்ளையார்குளம் கிராம மக்கள் 2 ஆவது நாளாக ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
நடுப்பிள்ளையார்குளத்தில் இடுகாடு பிரச்னை தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனைக் கண்டித்தும் பொதுமக்கள் ஆட்சியர் இல்லத்தை திங்கள்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் 100-க்கும் மேற்பட்டோர் கொக்கிரகுளத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் அளித்த மனு: அலவந்தான்குளத்தைச் சேர்ந்த அந்தோனியின் மகன் பிச்சையா எங்கள் ஊரில் வசித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரை காலி செய்து செல்வதாகக் கூறிச் சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினர் அனைவரும் கிறிஸ்தவராக அங்குள்ள சபையில் உள்ளனர். ஆனால், பிச்சையா உயிரிழந்த நிலையில் அவர் வசித்த ஊரில் புதைப்பதற்கான இடம் இருந்த நிலையில், பிரச்னை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ள எங்கள் ஊரில் அடக்கம் செய்ய குழந்தைசாமி என்பவர் முயற்சித்தார். 
இதுதொடர்பாக பிரச்னை ஏற்பட்டதால் அதிகாரிகள் அவர்களுக்கு மாற்று இடத்தைக் காண்பித்தனர். இந்நிலையில், எங்கள் தரப்பைச் சேர்ந்த மேகலிங்கம் மகன் சுப்பிரமணி (40) என்பவரை போலீஸார் தாக்கியதோடு, வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவர் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com