நெல்லையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய ஓய்வூதியம் நிர்ணயம் செய்ததில் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; அரசாணையில் அறிவித்தபடி சி, டி பிரிவுகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், தகுதியுள்ள ஓய்வூதியர்களுக்கும் தாமதமின்றி பொங்கல் அன்பளிப்பு வழங்க வேண்டும்; ஊராட்சி, நகராட்சியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் எல்.எப். ஆடிட் துறை மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திருத்தம் செய்து உடனே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் குமாரசாமி தொடக்கவுரையாற்றினார். 
நிர்வாகிகள் நெடுஞ்செழியன், முத்துகிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். நிர்வாகிகள் செந்தில்ஆறுமுகம், கோபாலன், அபுபக்கர், ராஜேஸ்வரன், சலீம் முகம்மது மீரான், சுந்தரமூர்த்தி, பாலசுப்பிரமணியன், துரைடேனியல் உள்பட பலர் கலந்துகொண்டனர். வைகுண்டமணி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com