"பிளஸ்-1 நேரடி தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட  நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம்'

பிளஸ்-1 நேரடித் தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-1 நேரடித் தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் சாய்லட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2018ஆம் ஆண்டு மார்ச்,  ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்த நேரடித் தனித்தேர்வர்கள் (தத்கல் உள்பட) செவ்வாய்க்கிழமை முதல்  ww​w.​d​g​e.​t​n.​g​o​v.​i​n  என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம். 
அந்த இணையதளத்திற்குச் சென்று முதலில் ஹால் டிக்கெட் டவுன்லோடு என்ற வாசகத்தை க்ளிக் செய்ய வேண்டும். அதன்பின்பு தோன்றும் பக்கத்தில் "hi​g​h​er se​c​o​n​d​a​ry fi​r​st ye​ar ex​am ma​r​c​h/​a​p​r​il 2018- pr​i​v​a​te ca​n​d​i​d​a​te- ha​ll ti​c​k​et pr​i​nt ou​t"  என்ற வாசகத்தை க்ளிக் செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண்,  பிறந்த தேதியை பதிவு செய்தால் அவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். 
அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com