சேரன்மகாதேவி, மேலக்கல்லூரில் 17இல் மின் நிறுத்தம்

சேரன்மகாதேவி, மேலக்கல்லூர் பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 17) மின்சாரம் இருக்காது.

சேரன்மகாதேவி, மேலக்கல்லூர் பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 17) மின்சாரம் இருக்காது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் வாரியத்தின் கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் வீ. புலமாடன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
மேலக்கல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி சனிக்கிழமை காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த நேரத்தில் மேலக்கல்லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கன்திரடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இதேபோல, கரிசல்பட்டி துணை மின் நிலையத்தில் அன்றைய தினம் மதியம் 1 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கனாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

பாளையங்கோட்டை பகுதியில்...
பாளையங்கோட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் பிப். 17 ஆம் தேதி மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  தமிழ்நாடு மின்சார வாரிய திருநெல்வேலி நகர்புறப்பிரிவு செயற்பொறியாளர் த. ஐசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
பாளையங்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (பிப். 17 ) காலை 9 முதல் மாலை 5 மணி வரை வி.எம். சத்திரம், கே.டி.சி. நகர், ரஹ்மத்நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மார்க்கெட்,  பேருந்து நிலையம், திருச்செந்தூர் பிரதான சாலை, மகராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர், பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு, பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப் பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, அரியகுளம், திருவனந்தபுரம் சாலை, முருகன்குறிச்சி, மேலப்பாளையம், கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு, செய்துங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com