ரோபோட்டிக்ஸ் போட்டி: புஷ்பலதா பள்ளி மாணவர்கள் சாதனை

தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் போட்டியில் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யாமந்திர் பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்று பதக்கங்கள் பெற்றனர்.

தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் போட்டியில் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யாமந்திர் பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்று பதக்கங்கள் பெற்றனர்.
 என்ட்ரென்ச் எலக்ட்ரானிக்ஸ், ஐ.ஐ.டி. நிறுவனம் சார்பில் என் விஷன் எனும் பெயரில் நடைபெற்ற தேசிய அளவிலான இப்போட்டியில் 2 குழுக்களாக இப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல், 2 ஆவது இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோப்பை, முதலிடம் பெற்றவருக்கு ரூ. 7500 , 2 ஆம் இடம்பெற்றவருக்கு ரூ. 2500 பரிசுகள் வழங்கப்பட்டன.
  சென்னையில் இந்தியா ஸ்டெம் பவுன்டேசன் நடத்திய 6 முதல் 9 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கான இப்போட்டியில் 4 ஆம் வகுப்பு மாணவர்கள் வெற்றி பெற்று கோப்பை, பதக்கம் வென்றனர். 
 இம் மாணவர்களை பள்ளித் தாளாளர் புஷ்பலதா பூரணன், முதல்வர் புஷ்பவேணி ஐயப்பன், ஆசிரியர்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com