இந்திய கம்யூனிஸ்ட்  ஆர்ப்பாட்டம்

திசையன்விளையில் அரசு மருத்துவமனையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திசையன்விளையில் அரசு மருத்துவமனையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திசையன்விளை அரசு மருத்துவமனையில் கடந்த 3ஆம் தேதி மாலினி என்ற பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்றது. பின்னர் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத காரணத்தால் உயிரிழந்தார்.
அவரது சாவுக்கு அரசு மருத்துவமனை நிர்வாகமே காரணம் எனக் கூறி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திசையன்விளை பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது,  "மாலினி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்; அரசு மருத்துவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்; உடனடியாக உயிர்காக்கும் அனைத்து சாதனங்களையும் திசையன்விளை அரசு மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸில் அமைக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் காசி விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் பெரும்படையார், வட்டச் செயலர் சேதுராமலிங்கம்,  துணைச் செயலர் கலைமுருகன், களக்காடு ஒன்றியச் செயலர் பாலசுந்தரம், விவசாய சங்க ஒன்றியச் செயலர் முருகன், வட்ட தொழிற்சங்கச் செயலர் நாமதுரை, திசையன்விளை நகரச் செயலர் ஆதிநாராயணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com