போலி ஆவணம் தயாரித்து  நிலம் மோசடி: தரகர் கைது

ராதாபுரம் அருகே போலி ஆவணம் தயாரித்து 7.91ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக நிலத் தரகர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

ராதாபுரம் அருகே போலி ஆவணம் தயாரித்து 7.91ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக நிலத் தரகர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
ராதாபுரம் அருகேயுள்ள சமூகரெங்கபுரத்சைச் சேர்ந்தவர் சுமதி (50). இவர், பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில்  வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான 7.91 ஏக்கர் நிலம் (மதிப்பு ரூ. 10 லட்சம்) சமூகரெங்கபுரத்தில் உள்ளதாம். இப்பகுதியைச் சேர்ந்த சுபலட்சுமி, நிலத் தரகர் குணசேகரன் (34) ஆகிய இருவரும் சேரந்து,  சுமதிக்குச் சொந்தமான நிலத்தை 2012இல் மேலப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ததை போன்ற போலி ஆவணம் தயாரித்து மோசடியாக விற்பனை செய்தது தெரியவந்ததாம். புகாரின்பேரில், திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு- தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் கிருபா, உதவி ஆய்வாளர் அருள்ரோசிங் ஆகியோர் வழக்குப்பதிந்து குணசேகரனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவர், வங்கியிலும் பண மோசடி செய்துள்ள தாகவும், தற்போது, கேரளத்தில் வசித்துவரும்  சுபலட்சுமியை தேடி வருவதாகவும் போலீஸார் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com